“கெட்ட நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வேன்!”

By காமதேனு

“கெட்ட நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வேன்!”

எல்லாவற்றுக்கும் நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் யமகானமரடி தொகுதி எம்.எல்.ஏ சதீஷ் ஜர்கிஹோலி சற்று வித்தியாசமானவர்.  காங்கிரஸ்காரரான இவர், ‘கெட்ட’ நாளும் நேரமும் பார்த்து, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அமைப்பு ஒன்றையும் நடத்தும் இவர், வருடம் ஒரு முறை தனது ஆதரவாளர்களுடன் ஒரு நாள் முழுக்க பெலகாவியில் உள்ள சுடுகாட்டில் தங்கும் வழக்கத்தைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடைபிடிக்கிறார். பெரியாரின் பேரன்கள் வாழும் பகுத்தறிவு பூமியான தமிழகத்தில்கூட இப்படியொரு எம்.எல்.ஏ இல்லை!

பேச்சில் மட்டும்தான் சமத்துவமா?

கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கட்சிகள் அனைத்தும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டுள்ளன. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை, பெண்களுக்கு மிகக்குறைந்தளவே வாய்ப்பு வழங்கியிருப்பது. மூன்று கட்சி வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்கள் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இடம்பெற்றுள்ளனர். 2013 சட்டமன்ற தேர்தலில் 175 பெண்கள் போட்டியிட்டனர். இது மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை யில் 6 சதவீதம். அவர்களில் பலரும் சுயேச்சையாகப் போட்டி யிட்டவர்கள். மேடைகளிலும் ஊடகங்களிலும் பாலின சமத்து வம் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள், அதை உட்கட்சி, பொதுத்தேர்தல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE