பறக்கட்டும் அதிகாரப் பரவலாக்கக் கொடி!

By காமதேனு

மாநிலங்கள் உரிமைக்கான பயணத்தில் மகத்தான அடியெடுத்து வைத்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. கர்நாடகத்துக்கு என்று தனிக் கொடியை அறிமுகப்படுத்தியவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அதை அனுப்பப்போவதாகவும் அறிவித்தார்.

மேலே மஞ்சள், நடுவில் வெள்ளை, கீழே சிகப்பு, நடுவில் உள்ள வெள்ளைப் பகுதியில் கர்நாடக அரசின் முத்திரை என்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், கர்நாடக அறிவுத்துறையினர் பெரும்பாலானோரைக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து காண முடிந்தது.

மாநிலத்துக்கு எனத் தனிக் கொடி என்ற கோரிக்கையுடன் 1970-களிலேயே டெல்லியில் போய் அமர்ந்தவர் கருணாநிதி. ஆனால், பின்னாளில் திமுகவின் குரல் வலுவிழந்து போனது. இப்போது காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு சித்தராமையா முன்னெடுக்கும் முயற்சியை மாநில சுயாட்சிக்கான மகத்தான அறைகூவலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE