அசைவ இந்தியா!

By காமதேனு

இந்தியர்கள் என்றாலே சைவ உணவுக்காரர்கள் என்ற பிம்பம் உண்டு. தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு (2005-2006), தேசிய மாதிரி கணக்கெடுப்பு (2011-2012) உள்ளிட்ட கணக்கெடுப்புகளை வைத்து ‘ஈ.பி.டபிள்யூ’ (EPW) இதழில் பால்முரளி நடராஜன், சூரஜ் ஜேக்கப் ஆகியோர் எழுதிய கட்டுரையில், இந்தியர்களில் சைவ உணவுக்காரர்களின் விகிதம் 23% முதல் 37% வரை மட்டுமே என்று ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது.

சைவத்தில் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு முதல் மூன்று இடங்கள். தமிழ்நாட்டுக்குப் 13-வது இடம். கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு இறுதி இடங்கள். வடக்கிலும், மேற்கிலும் சைவமும், கிழக்கிலும் வடகிழக்கிலும் தெற்கிலும் அசைவமும் அதிகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE