கண்ணியத்தோடு இறக்க முடிவெடுப்பது ஒருவரது அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.ஒரு நோயாளியை மருத்துவர்கள் பரிசோதித்து உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று அறிக்கை கொடுத்துவிட்டால் அந்த நோயாளியும் கண்ணியமாக உயிர் நீக்க விரும்பினால்.
அவரது அனுமதியுடன் அவரைக் ‘கருணைக் கொலை’ செய்ய வழிவகுக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு. ஒருவரை உயிர் பிழைக்க வைப்பதற்கான செயற்கை ஏற்பாடுகளை படிப்படியாக நிறுத்துவதே ‘கருணைக் கொலை’ என்று சொல்லப்படுகிறது.