பள்ளிகளில் பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை 14417 என்ற எண்ணுக்கு மாணவ, மாணவிகள் அச்சமின்றி தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் தெரிவிக்கலாம் என்று, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “மாணவர்கள் மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? பாதுகாப்பற்ற சூழலில் உள்ளீர்களா? தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவையா? உடனே 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழையுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.