சென்னை: அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அண்ணா பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர்கள் இதுவரை அப்பல்கலைக் கழகம் வாயிலாகவே நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர்கள், நூலகர்கள் முதல்முறையாக டிஆர்பி போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட பணிகளுக்கான நேரடி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் ஜெ.பிரகாஷ் அறிவித்துள்ளார். இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள்அதன் நிலவரம் குறித்து ஆன்லைனில் (https://rcell.annauniv.edu/Direct Recruitment) தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.