டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணி தேர்வு முடிவு வெளியீடு

By KU BUREAU

கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அரசு சட்ட கல்லூரி உடற்கல்வி இயக்குநர், அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் (சட்டம்), தலைமைச் செயலக நிருபர் (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல் துறை உதவி இயக்குநர், சமூகநலத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் மொத்தம் 109 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுகள் கணினிவழி மற்றும் ஓஎம்ஆர் விடைத்தாள் மூலமாக கடந்த 2024 ஆகஸ்ட் 12, 19, 20, 21-ம் தேதிகளில் நடைபெற்றன.

இத்தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி கடந்த 22-ம் தேதி வெளியிட்டுள்ளது. நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள 220 தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE