நாளை நடைபெற​விருந்த யுஜிசி நெட் தேர்வு தள்ளிவைப்பு

By KU BUREAU

சென்னை: பொங்கல் பண்டிகை​யையொட்டி நாளை (15-ம் தேதி) நடைபெற​விருந்த யுஜிசி நெட் தேர்வு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. கல்லூரி உதவிப்பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்டி சேர்க்கை ஆகியவற்றுக்கான தகுதித் தேர்வாக ஆண்டுக்கு இரண்டு முறை யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை மூலம் கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்​களுக்கு இத்தேர்வு நடத்​தப்​படு​கிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்​துக்கான அறிவிப்பு வெளி​யாகி விண்​ணப்​பங்கள் பெறப்​பட்டன.

இதற்கான தேர்​வுகள் ஜனவரி 3 முதல் 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்​கப்​பட்​டது. ஜனவரி​யில் தமிழர்​களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கொண்​டாடப்​படு​கிறது. எனவே, பொங்கல் திருநாளில் அறிவிக்​கப்​பட்​டுள்ள யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்க வேண்​டும்.

அவற்றுக்கான மாற்று தேதிகளை அறிவிக்க வேண்​டும் என முதல்வர் மு.க.ஸ்​டா​லின், கனிமொழி எம்பி, உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்​டோர் மத்திய அரசை வலியுறுத்​தினர். இந்நிலை​யில், ஜனவரி 15-ம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு மட்டும் தள்ளிவைக்​கப்​படு​வ​தாக​வும், இதற்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்​கப்​படும் எனவும், அதேநேரம் ஜனவரி 16-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வு திட்​ட​மிட்​டபடி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரி​வித்​துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE