க்யூட் நுழைவுத் தேர்வு: மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது!

By KU BUREAU

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

ருப்பமுள்ள பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த பிப்ரவரி 2-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ)ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE