வேளாண் கல்வி, ஆராய்ச்சி விருது யுஜிசி அறிவுறுத்தல்

By KU BUREAU

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் (ஐசிஏஆர்), நாட்டில் வேளாண்மை, வேளாண் கல்வி, விரிவாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ராஷ்ட்ரிய கிருஷி விஞ்ஞான் புரஸ்கார் (ஆர்கேவிபி) விருதை வழங்கி வருகிறது.

இந்த விருது வேளாண்மை மற்றும் அதுசார்ந்த அறிவியல் துறையில் ஆராய்ச்சி; வேளாண்மை, வேளாண் கல்வி, விரிவாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் ஆகிய வற்றில் சிறந்த இடைநிலைக் குழு ஆராய்ச்சி, வேளாண் கல்வி, வேளாண் அறிவியல் துறைகளில் சிறந்த பெண் விஞ்ஞானி, சிறந்த இளம் விஞ்ஞானி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

எனவே, உயர்கல்வி நிறு வனங்கள் இந்த விருதுக்கான பரிந்துரைகளை https://awards. gov.in/ என்ற வலைதளத்தில் ஜன. 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரையான நாட்களுக்குள் பதிவு செய்யலாம். பல்கலைக்கழகங் கள், கல்லூரிகள் இந்த விருது தொடர்பான தகவல்களை தங்களது கல்வி நிறுவனங் களின் ஆசிரியர்கள், ஆராய்ச் சியாளர்கள் மற்றும் மாணவர் களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE