‘மாணவர்கள் போதைப் பழக்கத்தில் அடிமை ஆகிறார்களா?’ - ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டுகோள்

By ஆனந்த விநாயகம்

சென்னை: மாணவர்கள் போதைப்பழக்கத்தில் அடிமையாகி இருக்கிறார்களா? என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. துறையின் ஆணையர் ஆர்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், ஜெபராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

இதில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பேசுகையில், “மாணவ சமுதாயம் போதையின் பாதையில் செல்வதை தடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறது. மாணவர்கள் யாராவது போதைப்பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களை அனைவரின் முன்பாக கண்டிக்காமல், நல்வழி கூறி சிந்திக்க செய்யுங்கள்.

அரசின் மறுவாழ்வு மையங்களுக்கு அவர்களை அனுப்ப உதவிடுங்கள். உங்கள் கண்காணிப்பு அவர்களின் நாளைய வாழ்க்கையை காப்பாற்ற செய்யும் பெரும் முயற்சி ஆகும். இது சம்பந்தமான தகவல்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள். வகுப்பறைகளில் நன்னெறி கல்வி போதிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE