தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு பிப்ரவரி முதல் புதிய பாடத்திட்டம்

By KU BUREAU

சென்னை: மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய வேலை வாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவு செய்து, அதற்காக வல்லுநர்கள் அடங்கிய குழுவையும் அமைத்தது. அதைத் தொடர்ந்து, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வு முறையும் அண்மையில்தான் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டமும் மாற்றியமைக் கப்பட்டு புதிய பாடத்திட்டம் தொழில்நுட்பக் கல்வி இயக்க கத்தின் இணையதளத்தில் (https: //dte.tn.gov.in/revised-gte-syllabus) வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் பிப்ரவரி முதல் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE