விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நிதி வழங்காத அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - மாணவர்கள் அவதி

By KU BUREAU

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்ல நிதி வழங்காததால் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தென்னிந்திய மற்றும் அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று மாணவர்கள் தொடர் சாதனைகளை படைத்துள்ளனர். மேலும் இங்கு பயின்றவர்கள் விளையாட்டு இடஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் குறைந்தபட்ச தகுதியே தென்னிந்திய மற்றும் அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளை யாடுவதும், வெற்றி பெறுவதே ஆகும்.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக இணைக்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அண்ணாமலை பல்கலைகழம், விளை யாட்டு வீரர்களுக்கு உரிய நிதியை தராததால் மாணவர்கள் பாதிப்புக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

தென்னிந்திய மற்றும் அனைத்து இந் திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பல்வேறு விளையாட்டுப் பிரிவு போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர்கள், அணி மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப் படுவதில்லை. மேலும் கடந்த 2 ஆண்டு களாக போட்டிகளில் பங்கேற்க செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை கூட வழங்கப்படுவதில்லை.

கடந்த 2 ஆண்டு களாக விளையாட்டு வீரர்கள், தங்கள் குடும்ப கஷ்டங்களையும் கடந்து, சொந்த செலவிலேயே வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க சென்று வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாமல் இருப்பது வீளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னைக்கு சென்று வந்த கபடி ஆண்கள் அணிக்கும் எவ்வித நிதியோ, சீருடையோ வழங்கப்படவில்லை. இனி நிதி வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் போட்டிக ளில் பங்கேற்க செல்வதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது.

விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணி வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையில் இளம் வயது முதல் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, விளையாட்டை உயிர் மூச்சாக நினைத்து, போட்டிகளில் பங்கேற்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி வழங்காதது ஆர்வத்தை குறைப்பதோடு, அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரியில் படிக்கும்மாணவ, மாணவிகள் சராசரி கும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு விளையாட்டு போட்டியில் பங்கேற்க நிதி வழங் காதது, அவர்களின் எதிர்கால கனவை பாதித்துள்ளது.

மேலும் அரசு கல்லூரிகளில் சேர்க்கையின்போது ஒவ்வொரு மாணவர்களிடமும் விளையாட்டிற்கான தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த நிதி இணைவு கல்லுாரிகள் மூலம் கணிசமான தொகை பல்கலைக்கழகத்துக்கு செல்கிறது.

விளையாட்டுக்கான மாணவர்களின் சேர்க்கை நிதி மட்டுமே, சுமார் ரூ.75 லட்சத்திற்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 26-ம் தேதி தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடலூரில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத்தில் 683 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி விளையாட்டில் உலக அரங்கில் தமிழகம் மிளிர வேண்டு என்று செயல்பட்டு வரும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிலை வேதனையை அளிக்கிறது என்கின்றனர் கடலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள்.

பல்கலைகழகங்களுக்கு இடையே யான போட்டிகளுக்கு செல்லும் விளை யாட்டு வீரர்களுக்கு உரிய நிதியை அண் ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இணைப் புக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE