கரூர்: கரூர் மாவட்ட மைய நூலகத்திற்கு இன்று (நவ. 28ம் தேதி) கரூர் ராஜாஜி தெருவில் உள்ள தனியார் (எல்என்விஎன்) மழலையர், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மைய நூலகத்தின் கணினி மயமாக்கப்பட்டதின் செயல்பாடுகள், பயன்கள், இணைய சேவை, வாசிப்பு, வாசித்ததை பகிர்ந்து கொள்வதால் கிடைக்கும் மன மகிழ்ச்சி, நூல்களை கையாளுதல், திறனாய்வு செய்தல் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து கற்றுத்தரப்பட்டது.
மேலும் மெய்நிகர் நூலக கருவியில் அறிவியல் சார்ந்த காட்சிகளை மாணவ, மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர். இப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் நூலக உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
» ‘பொது சுகாதாரத்துக்கான சித்த மருத்துவம்’ - சித்தா தினம் கொண்டாட கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
» கனமழை எதிரொலி: இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!