‘பொது சுகாதாரத்துக்கான சித்த மருத்துவம்’ - சித்தா தினம் கொண்டாட கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: நாடு முழுவதும் சித்தா தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, ”சித்த மருத்துவப் படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: "சித்த மருத்துவத்தை போற்றும் வகையில் அதன் முன்னோடியான அகத்தியர் பிறந்த நாளை ஆண்டுதோறும் சித்தா தினமாக கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியது. அந்த வகையில் எட்டாவது ஆண்டு சித்தா தினம் டிசம்பர் 19ம் தேதி கொண்டப்பட உள்ளது.

இதையடுத்து, சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (சிசிஆர்எஸ்), மத்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ‘பொது சுகாதாரத்துக்கான சித்த மருத்துவம்’ என்ற தலைப்பில் சித்தா தின கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கவுள்ளது. எனவே, சித்த மருத்துவப் படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் சித்த மருத்துவத்தின் நோக்கத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்,பயிற்சிப் பட்டறை, கண்காட்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE