இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்: கல்லூரிகள் கொண்டாட யுஜிசி அறிவுறுத்தல்

By சி.பிரதாப்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை உயர்கல்வி நிறுவனங்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: "நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவுக்கூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் முன்னிலைப்பட்டு விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன்படி நடப்பாண்டும் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை விளக்கும் விதமான கருத்தரங்குகள், விவாதக் கூட்டங்கள், கட்டுரை எழுதுதல், வினாடி- வினா போட்டிகள் உட்பட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உயர்கல்வி நிறுவனங்கள் நடத்த வேண்டும். மேலும், சட்ட தினம் கொண்டாட்ட விவரங்களை யுஜிசியின் வலைத்தளத்தில் (https://www.ugc.gov.in/) பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE