அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே இனி பணியாளர்கள் நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் திடீர் முடிவு

By KU BUREAU

சென்னை: அண்ணா பல்கலைக்​கழகத்துக்கு உட்பட்ட டீன்​கள், பல்வேறு மையங்​களின் இயக்​குநர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்​பியுள்ள சுற்​றிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பல்கலைக்கழக நிதிக்​குழு மற்றும் சிண்​டிகேட் குழு எடுத்த முடி​வின்​படி, புதிதாக மேற்​கொள்​ளப்​படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்​கள், ஊழியர்கள் நியமனம் தினக்​கூலி அல்லது தொகுப்​பூ​தியம் அடிப்​படை​யில் அவுட்​சோர்​சிங் முறை​யில் மட்டுமே மேற்​கொள்​ளப்​படும்.

ஏதேனும் திட்​டங்​களுக்கு பணியாளர்கள் தேவைப்​பட்​டால் தினக்​கூலி அல்லது தொகுப்​பூ​தி​யத்​தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடி​யும் வரை பணியில் அமர்த்​தலாம். ஏதேனும் ஒரு துறை​யில் கூடு​தலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் பற்றாக்​குறை உள்ள வேறு துறை​யில் பணியமர்த்​தலாம். இந்த புதிய உத்தரவு 20.11.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அந்த சுற்​றறிக்கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இதன்மூலம், அண்ணா பல்கலைக்​கழகத்​தில் இனிமேல் நிரந்தர உதவி பேராசிரியர்களோ, அலுவலர்​களோ, ஊழியர்களோ நியமிக்​கப்பட மாட்​டார்கள் என்ற சூழல் ஏற்பட்​டுள்​ளது. தமிழகத்​தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்​களி​லும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவி​களில் ஏராளமான காலி​யிடங்கள் உள்ளன. அவற்றில் தினக்​கூலி, தொகுப்​பூதிய அடிப்​படை​யில் ஆயிரக்​கணக்​கானோர் நீண்ட​காலம் பணியாற்றி வருகின்​றனர்.

அண்மை​யில் தேசிய கல்விக் கொள்​கை-2020 தொடர்பான கருத்​தரங்​கில் பங்கேற்க சென்னை வந்திருந்த பல்கலைக்கழக மானியக்​குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், பல்கலைக்​கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொகுப்​பூ​திய ​முறையில் ஆசிரியர்களை நியமிக்​கக்​ கூடாது என அறி​வுறுத்​தியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE