10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு கால அட்டவணை வெளியீடு

By KU BUREAU

சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு​களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, தேர்​வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி நிறைவடைகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு​களுக்கு ஆண்டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, நடப்பு (2024-25) கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்​ரவரி 15-ம் தேதி தொடங்​கும் என்று ஏற்கெனவே அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. இந்நிலை​யில், தேர்​வுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக, விரிவான கால அட்ட​வணையை சிபிஎஸ்இ வெளி​யிட்​டுள்​ளது.

அதன்​படி, 10-ம் வகுப்​புக்கு பிப்​ரவரி 15 முதல் மார்ச் 18-ம் தேதி வரையும், 12-ம் வகுப்​புக்கு பிப்​ரவரி 15 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையும் தேர்​வுகள் நடைபெறுகின்றன. இத்தேர்​வுகளை சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேர்​வுகள் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சில தொழில்​நுட்ப பாடத் தேர்​வுகள் மட்டும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடத்​தப்​படும். 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி முடித்து, உயர்​கல்விக்கான நுழைவுத் தேர்​வு​களுக்கு தயாராக ஏதுவாக கால அட்டவணை தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

அதேபோல, ஒவ்வொரு தேர்​வுக்கு இடையிலும் போதிய அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கூடுதல் விவரங்களை www.cbse.gov.in இணை​யதளம் மூலம் ​மாணவர்​கள் அறிந்து ​கொள்​ளலாம் என்று சிபிஎஸ்இ தெரி​வித்​துள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE