மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களில் உதவி மையம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

By KU BUREAU

சென்னை: மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களில் உதவிமையம் அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசுஉதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் பயன்பெறும்வகையில் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்தமையம் மூலம் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம். பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் இந்த மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE