தென்காசி மாவட்டத்தில் ரூ.15.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ரூ.15.89 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

இதைத் தொடர்ந்து தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழாவில் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், சங்கரன்கோவில் எம்எல்ஏ-வான ஈ.ராஜா ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, ''மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.63.54 லட்சம், சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.148.26 லட்சம், வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.105.9 லட்சம், அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.127.08 லட்சம், மடத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.169.44 லட்சம், ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.84.72 லட்சம், வேலாயுதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.42.36 லட்சம்,

செங்கோட்டை ஸ்ரீராம மந்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளில் ரூ.169.44 லட்சம், புளியரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.127.08 லட்சம், தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.169.44 லட்சம், சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சம், சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.63.54 லட்சம், சிவகுருநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.232.98 லட்சம் என மொத்தம் ரூ.15.89 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 13 பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் இன்று திறந்துவைத்துள்ளார்'' என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE