சிஏ, ஏசிஎஸ், சிஎம்ஏ தேர்வுகள்: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தாட்கோ சார்பில் சிறப்பு பயிற்சி

By KU BUREAU

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சி.ஏ. ஏசிஎஸ், சிஎம்ஏ ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) மேலாண் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ நிறுவனம் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் 100 பேருக்கு சிஏ, கம்பெனி செகரட்டரி (ஏசிஎஸ்), காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் (சிஎம்ஏ) ஆகியவற்றில் இன்டர்மீடியட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.

இது ஓராண்டு கால பயிற்சி ஆகும். இதில் சேர விரும்புவோர் பி.காம். பட்டதாரியாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் உணவு, தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தாட்கோ நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tahdco.com) பதிவுசெய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE