அண்ணா பல்கலை.யில் நிதி பகுப்பாய்வு படிப்பு

By KU BUREAU

சென்னை: தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமான என்எஸ்இ அகாடமியுடன் இணைந்து நிதி பகுப்பாய்வு (Financial Analytics)என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேலாண்மை கல்வி துறை அறிமுகம் செய்துள்ளது.

இது 11 மாத படிப்பாகும். பட்டதாரிகள், இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள், வேலை செய்வோர், தொழில்முனைவோர் சேரலாம். வார இறுதி நாட்களில் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும். பேராசிரியர்கள், நிதிச் சந்தை மற்றும் நிதி பகுப்பாய்வு நிபுணர்கள் வகுப்பு எடுப்பார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த படிப்பை முடிப்பவர்கள் பங்குச் சந்தை ஆய்வாளர், நிதி தொழில்நுட்ப ஆய்வாளர், நிதி ஆலோசகர், நிதி மேலாளர், முதலீட்டு ஆய்வாளர் போன்ற பணிகளில் சேரலாம். இதில் சேர, www.annauniv.edu தளத்தில் நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் ஆன்லைனில் நேர்காணல் நடைபெறும். வகுப்புகள் ஜன.2-ல் தொடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE