கடந்த 2006-ம் ஆண்டு முதல், புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியி யல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியானது புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் என்சிடிஇ அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இக்கல்லூரி யில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் அரசால் நடத்தப்படும் ஒரே ஒரு கூட்டுறவு கல்வியில் கல்லூரி இது மட்டுமே. இக்கல்லூரியை சமுதாய கல்லூரிகளோடு இணைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கூட்டுறவுத்துறையில் இருந்து உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்தக் கல்வியியல் கல்லூரி கொண்டு வரப்படும் என முதல்வர் ரங்கசாமியும் அறி வித்தார்.
இதற்காக, கூட்டுறவு கல்வியியல் கல்லூரியானது அரசு கல்வியி யல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று இக்கல்லூரி உயர்கல்வி துறையுடன் இணைக் கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் இவ்வாறு அறிவித்து ஒன்றரை ஆண்டுகளாகி யும் இதுவரையிலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதேபோல் இங்கு பணிபுரிவோ ருக்கு ஊதியமும் வராத சூழல் ஏற்பட்டது.
» மயக்க நிலையில் கிடந்த பாம்பு; சிபிஆர் செய்து காப்பாற்றிய நபர் - அதிர்ச்சி வீடியோ!
» சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. 86-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்
இதுபற்றி கல்லூரி வட்டாரங்களில் விசாரித்தபோது, "கூட்டுறவுத் துறையில் இருந்து உயர்கல்வித்துறைக்கு மாற்றுவதாக உத்தரவிட்டவுடன் கோப்புகளை உயர்கல்வித் துறைக்கு அனுப்பி விட்டதாக கூட்டுறவுத் துறையில் தெரிவிக்கின்றனர். இதற்கான அரசாணை இன்னும் வெளியாகவில்லை. அதனால் இன்னும் மாற்றம் முழுமையாக நடக்கவில்லை.
இச்சூழலில் எங்களுக்கு 14 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இக்கல்லூரியில் 10 பேராசிரியர்கள், 15 ஊழியர்கள் என 25 பேர் பணிபுரிகிறோம். ஊதியம் வராததால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். பல கட்ட போராட்டம் நடத்தி விட்டோம். அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
முதலில் உயர்கல்வித்துறையில் கல்வியி யல் கல்லூரியை இணைத்து அரசாணை வெளியாக வேண்டும். அதைத்தொடர்ந்து 14 மாத ஊதியத்தை தர வேண்டும். முதல்வர் இவ்விஷயத்தில் உடன் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இக்கல்லூரியில் பணிபுரிவோர் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்க்கையும் இதில் அடங்கியுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.