சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 11ல் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், ஃபாரஸ்டர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குருப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. எனவே, இந்த மாதம் எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற சூழல் இருந்து வருகிறது.
» ஹரியானா தேர்தல் எதிரொலி: உ.பி இடைத்தேர்தலில் காங்கிரஸை கழட்டிவிட்ட சமாஜ்வாதி கட்சி!
» புரத ஆராய்ச்சி பணிகள்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!