தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

By வீரமணி சுந்தரசோழன்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 24ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) வாயிலாக தொடங்கியது.

விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 ஆக இருந்தது 24.05.2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். இதுதொடர்பாக சந்தேகம் இருந்தால் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE