ஒரே வாரத்தில் இரண்டாவது சூரிய காந்தப் புயல்... வட வெளிச்சத்தை மீண்டும் ரசிக்கத் தயாராகலாம்

By காமதேனு

ஒரே வாரத்தில் பூமியை மற்றுமொரு சூரிய காந்தப் புயல் தாக்க இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ஆனால் இம்முறை அது குறித்தான அச்சங்களை விட, பூமிக்கு பரிசளிக்கும் ’வட வெளிச்சம்’ தோரணங்களை அதிகம் எதிர்பார்க்கலாம்.

சூரியப் புயல் தொடர்பான அச்சுறுத்தலின் மறுபக்கமாக, கண்கவரும் மாயாஜால மாற்றங்கள் பூமியின் வான்வெளியில் நிகழ்வது வழக்கம். இந்த வகையில் மே 10 அன்று பூமியை தாக்கிய சூரிய காந்தப் புயல் காரணமாக கண்கவரும் வட வெளிச்சங்கள் பூமியை சுற்றி பார்வைக்கு அலங்கரித்தன. இயற்கையின் மாபெரும் அதிசயங்களை, நிலத்திலும், நீரிலும் மட்டுமல்ல வானிலும் காணலாம் என்பதற்கு இந்த வட வெளிச்சங்கள் உதாரணமாயின. வடக்கு வெளிச்சங்கள் எனப்படும் அரோரா பொரியாலிஸ் வெளிச்ச நடனங்கள் ஒரே வாரத்தில் இன்னொரு முறை பூமியில் நிகழ இருக்கிறது.

இதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் மட்டுமே இருந்தபோதும் அடுத்து வரும் சில தினங்களில் இந்த சூரிய காந்தப் புயலின் கண்கவர் விளைவுகளான அரோரா வெளிச்சத் தோரணங்களை கண்டு ரசிக்கலாம். அதிலும் இவை மே 10 அரோராக்களை விட அதிகளவில் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நாசா, ’மே 13 அன்று சூரியனில் நிகழ்ந்த காந்தப் புயல் அடுத்த சில தினங்களில் பூமியை தாக்க உள்ளது’ என தெரிவித்துள்ளது.

சூரிய காந்தப் புயலின் வீரியத்தை ஜி-ஸ்கேல் என்று அளவிடுவார்கள். இந்த வகையில் ஜி1 முதல் ஜி5 வரை இந்த புயலின் வீச்சு அமைந்திருக்கும். இவற்றில் ஜி 1 ரகம் உயர் அழுத்த மின்கோபுரங்களை மெல்லிய தடுமாற்றங்களுக்கு ஆளாக்கும்; அதுவே ஜி 5 என்பது சேட்டிலைட் தகவல் தொடர்பு வரை பாதிக்கக்கூடும். மே 10 அன்று தாக்கிய சூரியப் புயல் ஜி 5 அளவிலானது. இந்த வகையில் சுமார் 2 தசாப்தங்களுக்கு அப்பால் இந்த மே 10 சூரிய காந்தப் புயல் வீரியமாக பூமியை தாக்கியது. ஆனால் பூமியில் அதனை எதிர்பார்த்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதனால் சூரியப்புயலின் அடையாளத்தை வட வெளிச்ச தோரணங்களோடு பூமி கடந்து சென்றது முடிந்தன.

சூரிய காந்தப் புயல் விளைவாக பூமியை அலங்கரித்த வட வெளிச்சம்

மே 10 காந்தப்புயல் காரணமாக நிகழ்ந்த வானத்து வர்ண வேடிக்கையை, அதற்கடுத்த 2 தினங்களில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வாழ் மக்கள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர். தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின், விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் 2003-ம் ஆண்டிலிருந்து மிகவும் சக்தி வாய்ந்ததாக கணித்திருக்கும் இந்த வான்வெளிக் காட்சியானது இங்கிலாந்து மக்களை அதிசயிக்க செய்துள்ளன. வான்வெளி அறிவியல் முதல் அதிசயங்கள் வரை துழாவுவோர் இதனை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE