10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூருக்கு முதலிடம் வேலூருக்கு கடைசி இடம்!

By காமதேனு

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.55% ஆகும். மாணவர்களை காட்டிலும் 5.95 சதவீதம் அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தற்போது தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் (கோப்பு படம்)

மொத்தம் 4105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 1364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன. 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதிய நிலையில், 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.45 சதவீதமாக உள்ளது. 260 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள்

97.31% தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 97.02 சதவீதத்துடன் சிவகங்கை இரண்டாம் இடத்தையும். 96.36 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி மூன்று இடங்களில் திருவண்ணாமலை 86.10%, ராணிப்பேட்டை 85.48%, வேலூர் 82.07% உள்ளன. சென்னை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 88.21% ஆக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE