10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு... 91.55 சதவீதம் தேர்ச்சி!

By காமதேனு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்றது. 4,107 மையங்களில் ஒன்பது லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

4,22,599 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இது 94.54 சதவீதம் ஆகும். 3,96,152 மாணவர்கள் தேர்ச்சி தேர்வாகியுள்ளனர். இது 88.58 சதவீதம் தேச்சியாகும். தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போன்று ஆங்கிலத்தில் 415 பேரும், கணித பாடத்தில் 20,691 பேரும், அறிவியல் பாடத்தில் 5,104, சமூக அறிவியலில் 4.428 பேரும் முழுமையான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

11,510 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதினர். அரியலூர் மாவட்டம் 97.31 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 4105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 87.90 சதவீத அரசுப்பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரியில் 91.28 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் 78.20 சதவீதம் தேர்ச்சி விகிதம் உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவ்களை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE