எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

By காமதேனு

தமிழ்நாட்டில் 2023- 2024-ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (மே 10) வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளு.

தமிழ்நாட்டில் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8- ம் ஆண்டு வரை நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள்

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24-ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

எஸ்எம்எஸ்

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE