பள்ளிக்கு அடிக்கடி தாமதமாக வருவது யார் என்ற வாக்குவாதத்தில், பள்ளி முதல்வர் - ஆசிரியை அடிதடியில் குதித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆக்ராவின் சீகானா கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக ஆசிரியை குஞ்சா சவுத்ரியை பள்ளி முதல்வர் கண்டித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஆசிரியை, பள்ளி முதல்வரும் தொடர்ந்து தாமதமாக வருவதாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படி இருவருக்கும் இடையே வெடித்த மோதல், கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பாகவும் மாறியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாணவர்கள் மத்தியில் அநேக ஒழுக்கங்களை கற்றுத்தரும் ஆசிரியர்கள், அந்த வகையில் அவர்களே முன்னுதாரணமாக இருக்கவும் எதிர்பார்ப்புக்கு ஆளாகிறார்கள். அந்த ஒழுக்கங்களில் நேரம் தவறாமையும் ஒன்று. ஆனால் பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள், அதனை எவரும் கேட்பதையும் விரும்பாதது, ஆக்ரா சம்பவத்தில் பிரதான பிரச்சினையாகி இருக்கிறது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டியதை அத்துமீறி பரஸ்பரம் தாக்குதலாகவும் பள்ளி முதல்வர் - ஆசிரியை இடையே தரம் தாழ்ந்து நடந்து கொண்டுள்ளனர். பள்ளிக்கு பாடம் கற்க மட்டுமே மாணவர்கள் அனுப்பப்படுவதில்லை. இதர மதிப்புக் கல்வியையும் கற்கும் நோக்கோடு அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் ஆக்ரா பள்ளி போன்ற மோசமான முன்னுதாரணங்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.
ஆக்ரா விவகாரத்தில் பள்ளி முதல்வர் - ஆசிரியை என இருதரப்பிலும் பரஸ்பரம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காவல் அதிகாரி ஜிதேந்திர குமார் கோண்ட், ’ஆசிரியர்களுக்கு இடையேயான தகராறு சமூக வலைதளங்களின் வைரல் வீடியோ மூலமாக தெரிய வந்ததாகவும், அதனை விசாரிக்க முற்பட்டபோது இருதரப்பினரின் புகார்களும் பெறப்பட்டதாகவும்’ தெரிவித்தார். இதனிடையே கல்வி அதிகாரிகளும் தங்கள் பங்குக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் - ஆசிரியை என இருவர் மீதும் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!
தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!
மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!
200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!
கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!