பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல், தன் முக அழகைப் பாதுகாக்க ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை ஒருவரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை எடுத்தவரை தலைமை ஆசிரியை தாக்கியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நல்ல ஆசிரியரால் தான் சமூகம் செம்மைப்படும் என்று உலகம் நம்புகிறது. தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை ஆசிரியர்களை நம்பி தான் பெற்றோர் ஒப்படைக்கிறார்கள். பள்ளியில் கற்கும் பாடம் தான், ஒருவரின் உயர்கல்விக்கு உதவி செய்கிறது. அதன் மூலமே அவர் நினைத்த லட்சியத்தை அடைய முடியும். இதன் காரணமாக கடனை வாங்கியாவது தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் படாதபாடு படுகிறார்கள்.
அப்படி பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் ஒரு தலைமை ஆசிரியை, ஃபேஷியல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிகாபூர் தொகுதியின் தண்டமாவு கிராமத்தில் ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சங்கீதா சிங் உள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உரிய முறையில் பாடம் கற்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாகவே உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் உணவு தயாரிக்கும் அறையில் தலைமை ஆசிரியை சங்கீதா சிங்கிற்கு நேற்று ஒருவர் ஃபேஷியல்(முகத்தை அழகுபடுத்தும் பணி) செய்து கொண்டிருந்தார்.
இந்த காட்சியை உதவி ஆசிரியர் அனம் கான் வீடியோவாக எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா சிங், அனம் கானை துரத்தி துரத்தி அடித்து உதைத்துள்ளார். இந்த நிலையில், இந்த இரண்டு வீடியோக்களையும் அனம் கான் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதைக் கண்ட மாவட்ட கல்வி அதிகாரி, தண்டமாவு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியை சங்கீதா சிங் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சங்கீதா சிங் தாக்கியதால், காயமடைந்த உதவி ஆசிரியர் அனம் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமை ஆசிரியை சங்கீதா சிங் மீது பிகாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார், சங்கீதா சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிகாபூர் வட்ட கல்வி அதிகாரி மாயா ராய் கூறுகையில், " தண்டமாவு கிராமத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை பள்ளி வளாகத்தில் ஃபேஷியல் செய்ததாகவும், இதை வீடியோ எடுத்த ஆசிரியையை அடித்து உதைத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!
வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!
பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!