ஜனவரி 7-ம் தேதி நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு மழை பாதிப்பு காரணமாக பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வை எழுத 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் மழை வெள்ளப் பாதிப்புகள் அதிகம் உள்ள நிலையில் தற்போது அந்த தேர்வுகள் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "07.01.2024 அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்/ வட்டார வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.
மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.01.2024 அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்விற்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்குப் பயன்படுத்தலாம் ' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
அதிகாலையில் ரவுடிகள் 2 பேர் சுட்டுக்கொலை... காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!
நள்ளிரவில் மயங்கி விழுந்த பொதுமக்கள்... ரசாயன வாயு கசிவால் வடசென்னையில் விபரீதம்!
சினிமா படப்பிடிப்பில் விபரீதம்; மின்சாரம் தாக்கி லைட்மேன் உயிரிழப்பு: மேலும் ஒருவர் படுகாயம்!
சரியும் தாவணி... மயக்கும் கண்கள்... பிரபல நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்!