சென்னை ஐஐடி நிர்மாண் செயல்விளக்க நிகழ்ச்சியில் முதல்முறையாக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தல்

By KU BUREAU

சென்னை: இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கருத்தாக்கங்களை சந்தைக்கு ஏற்ற வகையில் புதிய தயாரிப்புகளாக மாற்றும் வகையிலும் சென்னை ஐஐடியில் நிர்மாண் என்ற பிரத்யேகவழிகாட்டி அமைப்பு இயங்கி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), சுகாதார தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்ஸ்) சமர்ப்பித்துள்ள யோசனைகள் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளை ‘நிர்மாண் செயல்விளக்க நாள்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் காட்சிப்படுத்த நிர்மாண் திட்டமிட்டது. அந்த வகையில் நிர்மாண் செயல்விளக்க நிகழ்ச்சி ஐஐடியில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தொடங்கிவைத் தார். இதில் ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன. அப்போதுபேசிய காமகோடி, ‘‘புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் மாணவர்களுக்கான ஒருதளத்தை வழங்கும் சென்னை ஐஐடியில் அர்ப்பணிப்பே இந்த நிகழ்வுக்கு சான்று. முதலீட்டாளர்கள், தொழில்துறையினர், கூட்டு முயற்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாட அரிய வாய்ப்பு கிடைப்பதால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இந்நிகழ்வு ஏவுதளம்போன்றதாகும்’’ என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE