கன்னியாகுமரியில் குரூப் 2 தேர்வில் 28% பேர் ஆப்சென்ட்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் குரூப் 2 தேர்வில் 28% பேர் ஆப்சென்ட் ஆயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (தொகுதி 2 மற்றும் 2ஏ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது.

இத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 45 தேர்வு மையங்களிலும், விளவங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட 27 தேர்வு மையங்களிலும் 14,585 பேர் தேர்வு எழுதினார்கள். இது 72 % ஆகும். நாகர்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 9,970 பேரும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 4,815 பேரும் தேர்வு எழுதினார்கள். குமரி மாவட்டத்தில் மொத்தம் 20,336 பேர் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 5,751 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். இது 28 சதவீதம் ஆகும்.

நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளி தேர்வு மையத்தை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் 2 கண்காணிப்பு அலுவலர்களும், 7 பறக்கும் படை அலுவலர்களும், 19மொபைல் யூனிட்களும், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் தலா ஒருவர் வீதம் 72 ஆய்வு அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE