சிறந்த மொழிபெயர்ப்பு - கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு சாகித்ய அகாடமி விருது!

By காமதேனு

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி

இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கருங்குன்றம் நூல்

மமாங் தய் எழுதிய 'தி பிளாக் ஹில்' என்ற நாவலை மொழி பெயர்த்தற்காக சாகித்ய அகாடமி விருதை பெற உள்ளார். இந்த நூல் தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அவர், வேறு மொழிகளில் இருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி , புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ரமலான் நோன்பு... முஸ்லிம் அரசு ஊழியர்களின் பணி நேரத்தில் திடீர் மாற்றம்!

சமயபுரம் கோயிலில் தீ விபத்து... பூசாரிகளுக்கு தீக்காயம்; பக்தர்கள் அதிர்ச்சி!

காளிக்கு நள்ளிரவில் காளி பூஜை... பண்ணை வீட்டில் மண்டை ஓடுகளால் பரபரப்பு!

குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீஸாரை தாக்கிய கும்பல்... பரபர சிசிடிவி காட்சிகள்!

இயக்குநர், நடிகர் சூரியகிரண் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி

ReplyReply allForwardAttendee panel closed

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE