மும்பை தாராவியில் இருந்து முதல் முறையாக உமேஷ் கீலு என்பவர் ராணுவ அதிகாரியாக தேர்வாகியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப் பகுதியாக தாராவி விளங்குகிறது. இங்கு பெரும்பாலும் விளிம்புநிலை மக்களே வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சேர்ந்த பலர் கல்வி, விளையாட்டு, கலை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். இந்நிலையில், தாராவி குடிசைப் பகுதியை சேர்ந்த உமேஷ் கீலு என்பவர், முதல் முறையாக ராணுவ அதிகாரியாக தேர்வாகியுள்ளார்.
பட்டப்படிப்பு முடித்த அவர், குடும்பத்தின் வறுமைக்காக மூன்று ஆண்டுகள் டி.சி.எஸ்ஸில் வேலை செய்துள்ளார். பின்னர் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். தானும் ராணுவ அதிகாரியாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதற்காக ஒன்றல்ல.. இரண்டல்ல.. விடாது 12 முறை ராணுவ அதிகாரி படிப்புக்கான தேர்வினை எதிர்கொண்டுள்ளார். தொடர் முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் ஒருநாள் வெற்றி சாத்தியம் என்பதை போல, 13 வது தேர்வில் வெற்றிப் பெற்று ராணுவ அதிகாரியாக தேர்வாகியுள்ளார் உமேஷ் கீலு.
ராணுவ அதிகாரியாக உமேஷ் கீலுவை பார்த்த அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதை தாராவி குடிசைப் பகுதி மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து பேசிய உமேஷ் கீலு, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இந்திய ராணுவத்தில் அதிகாரியாகும் முதல் நபர் நான்தான். என்னைப் பார்த்து இன்னும் பலர் ராணுவத்தில் சேர்வார்கள். எங்கள் பகுதி மீதான பொதுப்பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
தேர்தலில் போட்டியில்லை... கமலுக்கு ராஜ்யசபா இடத்தை ஒதுக்கியது திமுக!
ஷூட்டிங் முடிந்து பார்ட்டி... சாய் பல்லவி உற்சாக நடனம்; வைரலாகும் வீடியோ!
தனியார் மருத்துவமனைகளின் பித்தலாட்டம்... சாட்டையடி கொடுக்கும் சத்யராஜ் மகள்!
இப்படியும் காசு பார்க்கலாமா? - 1,122 சடலங்களை ரூ.3.66 கோடிக்கு விற்ற கேரள அரசு!