10-ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்... அசல் மதிப்பெண் சான்றிதழ் குறித்து முக்கிய அறிவிப்பு

By காமதேனு

10-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்.6-ம் தேதி முதல் ஏப். 20-ம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இத்தேர்வின் முடிவானது கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல்‌ 2023 பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும்‌ இன்று (ஆக.18) காலை 10 மணி முதல்‌ அந்தந்தப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ மூலம்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ விநியோகம்‌ செய்யப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனித்தேர்வர்கள்‌ தங்களது மதிப்பெண்‌ சான்றிதழ்களைத் தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்‌ கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE