அரசு பற்றி அவதூறு பதிவு... பட்டதாரி ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட்!

By காமதேனு

அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வகுப்பு

செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றி தனது கட்டுரைகள் மூலம் பொதுசமூகத்திற்கு புரிதலை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து எழுதி வருகிறார். ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்து தொடர்பாக முகநூல் பக்கத்தில் சில கட்டுரைகளை எழுதி இருந்தார். இது அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி கருத்துகளை பதிவிட்டு வந்ததால், இந்த நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.

உமா மகேஸ்வரி

“ஏழைக்குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும் தீர்வுகளையும் குறித்து ஆசிரியர்கள் எழுதுவது குற்றசெயல் அல்ல. பொதுக்கல்விமுறையை பாதுகாக்கவும், சமகாலக்கல்வி முறையில் உள்ள குறைகளை சரிசெய்யவும் வலியுறுத்துவது ஆசிரியர்களின் ஜனநாயக கடமை. மாற்றுக்கருத்து கூறுவோரை அடக்குமுறை கையாளும் தமிழக அரசின் எதேச்சதிகார போக்காகவும், கருத்துரிமையை நசுக்கும் விதமாகவும் இந்த தற்காலிக பணிநீக்கம் உத்தரவு இருப்பதால் உமாமகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று அவருக்கு ஆதரவாக சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரோட்டில் நடந்த திருமணம்... கிறிஸ்தவ பெயரால் இந்துப் பெண்ணின் திருமணத்திற்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!

ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE