3 அடி உயரம்; எம்பிபிஎஸ் விண்ணப்பம் நிராகரிப்பு... தடைகளை உடைத்து வென்றுகாட்டிய மருத்துவர் கணேஷ்!

By காமதேனு

குஜராத்தில் 3 அடி உயரமுள்ள டாக்டர் கணேஷ் என்பவர் பல்வேறு தடைகளைத் தாண்டி பாவ்நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார்.

குடும்பத்துடன் கணேஷ்

குஜராத் மாநிலம், தாலஜா எனும் பழங்குடி கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சிறுவயதில் இருந்தே மருத்தவராக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. இதற்காகவே பள்ளிப்படிப்பை நல்ல மதிப்பெண்ணோடு முடித்தார். பின்னர் மருத்துவம் படிப்பதற்காக, கடந்த 2018ம் ஆண்டு ஆசையோடு விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை இந்திய மருத்துவ கவுன்சில் நிராகரித்தது. அதற்கு காரணம் அவரது மதிப்பெண் அல்ல.. அவரது 3 அடி உயரம். "உயரம் குறைவான அவரால், அவசரக்கால சிகிச்சைகளை அளிக்க முடியாது" என்று இந்திய மருத்துவ கவுன்சில் காரணம் கூறியது.

உயரம் குறைவால் சிறுவயது முதல் பல்வேறு கேலி கிண்டல்களை கடந்து வந்த கணேஷ்க்கு, விருப்பப்பட்ட மருத்துவ படிப்பை படிக்கவும் இதுவே தடையாக வந்துவிட்டதே என்று மனம் வருந்தினார். பின்னர், கல்விக்கு உயரம் என்பது தடையில்லை என்ற உணர்ந்த அவர், மருத்துவ படிப்பிற்கு அனுமதிக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கு உயரம் என்பது பொருட்டல்ல. எம்பிபிஎஸ் படிப்பதற்கு அனுமதி வழங்கி கணேஷ்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

சிகிச்சை அளிக்கும் கணேஷ்

இதையடுத்து குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது. சட்டப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த எம்பிபிஎஸ் படிப்பில், முழுக்கவனத்தையும் செலுத்தினார் கணேஷ். அவருக்கு கல்லூரி பேராசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்களும் உறுதுணையாக இருந்தனர்.

சமீபத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற அவர், தான் படித்த பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்தியாவில் உயரம் குறைந்த முதல் மருத்துவர் என்ற பெயரையும் எடுத்துள்ளார். சாதிக்க வயதோ, உயரமோ தடையில்லை என்பதை கணேஷ் இந்த உலகிற்கு உணர்த்தி, பலபேருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரோட்டில் நடந்த திருமணம்... கிறிஸ்தவ பெயரால் இந்துப் பெண்ணின் திருமணத்திற்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு!

அதிர்ச்சி... பாகிஸ்தானை விட மோசம்... இந்தியாவில் 67,00,000 குழந்தைகள் பட்டினியால் அவதி!

ஆட்சிக்கு ஆபத்தா?! கலங்கும் உடன்பிறப்புகள்... தஞ்சை பெரியகோயில் அகழியில் பயங்கர தீ விபத்து!

அடுத்த அதிர்ச்சி...17 வயது மாணவியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டுப் பலாத்காரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE