ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றிக் கொண்டே படித்த இளைஞர், ஒரே நேரத்தில் முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார்.
தற்போது இளைஞர்களிடம் அரசுப் பணி மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு விடாமுயற்சியுடன் படித்து பலர் வெற்றிப் பெற்று அரசு அதிகாரியாக மாறி வருகின்றனர். இதேபோல, தெலங்கானா மாநிலம், மன்சேரியல் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்த கொல்லே பிரவீன் குமாரும், அரசு அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கொல்லே பிரவீன் குமார், எம்.காம், பி.எட், எம்.எட் போன்ற படிப்புகளை முடித்துள்ளார். எனினும் போட்டித் தேர்வுக்கு படிப்பதற்கு இடையூறு ஏற்படாத வகையில் படிப்பு செலவுக்காக, ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இரவில் பணிக்கு இடையிலும், பகலில் தூக்கத்தை தொலைத்தும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். அவர் விடாமுயற்சியுடன் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளையும் எழுதி வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் ஒரே நேரத்தில் 2 போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது முதுகலை ஆசிரியர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் என 2 வேலைகளை கையில் வைத்துள்ளார். இரண்டில் பிடித்த ஒரு வேலையை அவர் தேர்ந்தெடுக்க உள்ளார். தற்போது காவலாளி பணியில் 9 ஆயிரம் மட்டுமே சம்பாதித்து வந்த பிரவீன், தனது கடின உழைப்பால் இனி ரூ.80 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்க உள்ளார்.
இந்த வெற்றி குறித்து பேசிய பிரவீன், “போட்டித் தேர்வில் மட்டுமே எனது முழுக்கவனமும் இருந்தது. படிப்பதற்கு ஒரு அறை, புத்தகங்கள், படிப்பு செலவுக்கு பணம் என மூன்றும் இருந்ததால் தேர்வில் வெல்ல முடிந்தது. உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்வியியல் மல்டிமீடியா ஆராய்ச்சி மையத்தில் இரவு காவலராக வேலை பார்த்ததால், காலையில் படிக்க அதிக நேரம் கிடைத்தது. ஆனால் 2 தேர்வுகளில் வெற்றிப் பெறுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!
வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!
பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!
தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!
போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?