பொதுத்தேர்வு திறமையை அளவிடும் அளவுகோல் அல்ல... +2 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

By காமதேனு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமையை எடை போடுவதற்கான அளவுகோல் தேர்வு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வுகளை 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை உட்பட 7.72 லட்சம் பேர் எழுதுள்ளனர். 21,275 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் இந்த தேர்வுகளை எழுத உள்ளனர். 3302 தேர்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் மையங்களும், 101 விடைத்தாள் சேமிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பாளர்களாக 43,200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்வு என்பது மற்றும் ஒரு கல்வியியல் நடைமுறை தானே தவிர, அது மாணவர்களின் திறமையை எடை போடுவதற்கான அளவுகோல் கிடையாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை அரசுப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

2024ல் சக்தி வாய்ந்த 100 இந்தியர்கள்... மோடி முதலிடம்... அமித்ஷா இரண்டாமிடம்... அசரடித்த பட்டியல்!

மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் காதலியுடன் திருமணம்... வைரலாகும் வீடியோ!

சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: செல்வப்பெருந்தகை தடாலடி பேட்டி!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ எங்களிடம் இருக்கு... பணம் கேட்டு மிரட்டிய பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது!

மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் வலை; கஸ்டம்ஸ் ஆபீசர் என பொய்... 259 பெண்களை ஏமாற்றிய பலே மோசடி மன்னன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE