தாயின் நினைவாக வைத்திருந்த பரீட்சை அட்டையை உடைத்த ஆசிரியர்கள்... தட்டிக்கேட்ட மாணவன் மீது தாக்குதல்!

By காமதேனு

தாயின் நினைவாக வைத்திருந்த பரீட்சை அட்டையை உடைத்த ஆசிரியரை தட்டிக்கேட்ட மாணவனை, ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டு தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாலம் காவல் நிலையம்

மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகுமார். இவரது 15 வயது மகன் உதயசாரதி மூவலூர் ராமாமிர்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் தரணி கடந்த 2015 ம் ஆண்டு இறந்துவிட்டார். தனது தாயார் மீது உதயசாரதிக்கு அளவு கடந்த அன்பு. தாயார் இறப்பதற்கு முன்பு மகனுக்கு தேர்வு எழுதுவதற்கான தேர்வு அட்டை ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அம்மாவின் நினைவாக அந்த அட்டையை மிகவும் பாதுகாத்து வைத்துள்ள உதயசாரதி, அந்த அட்டையை பயன்படுத்தித்தான் தேர்வு எழுதி வருகிறார்.

நேற்று முன்தினம் அந்த தேர்வு அட்டையை அவரது நண்பர் குணசீலன் என்பவர் இரவல் பெற்று தேர்வு எழுத எடுத்துச் சென்றுள்ளார். அந்த தேர்வு அட்டையில் இதயக் குறியீடு படம் வரையப்பட்டிருந்ததால் ஆசிரியை கலைவாணி அந்த அட்டையை வாங்கி தனது கணவரான தமிழ் ஆசிரியர் வரதராஜனிடம் கொடுத்துள்ளார், அவர் அதை உடைத்துள்ளார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

அந்த இதயக் குறியீட்டில் தனக்கு பிடித்த இருசக்கர வாகனத்தின் பெயர் தான் எழுதப்பட்டிருந்தது என்று கூறி, தனது தாயின் நினைவாக வைத்திருந்த தேர்வு அட்டையை எப்படி உடைக்கலாம் என்று கேட்டு ஆசிரியை கலைவாணியிடம் உதயசாரதி வாக்குவாதம் செய்ததாகவும், அதனால் அவர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவன் உதயசாரதியை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் பெரிதானது அடுத்து மாணவனை அழைத்து பள்ளியில் ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி சமரசம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் தமிழகத்தில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

திமுக - மநீம தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

குட்நியூஸ்... தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: நாளை தொடங்குகிறது!

அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கூச்சமே இல்லாமல் எப்படி வருகிறீர்கள்?: பிரதமர் மோடி மீது சாட்டை சொடுக்கிய திமுக!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE