மத்திய அரசின் தரவரிசை பட்டியல்: கடும் சரிவில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்!

By KU BUREAU

புதுச்சேரி: மத்திய அரசின் உயர்கல்வி தரவரிசை பட்டியலில், நாட்டின் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் ஜிப்மரைத் தவிர்த்து இதர புதுச்சேரி அரசு கல்வி நிறுவனங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதில், புதுச்சேரி மத்தியபல்கலைக்கழகம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 13-ம் இடத்தில் இருந்த மத்திய பல்கலைக்கழகம், தற்போது 100-வது இடத்துக்கு வெளியே சென்றுள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறை, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடு களை ஆய்வு செய்து நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜிப்மரைத் தவிர்த்து, இதர அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செயல்திறன் பின்னடவை சந்தித்துள்ளன.

ஜிப்மர், ஒட்டுமொத்த பிரிவில் 55.51 மதிப்பெண்களுடன் 39-வது இடத்தைப் பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளது. கடந்தாண்டு தரவரிசையில் 54-வது இடத்தில் இருந்து அதன் தேசிய தரவரிசை மற்றும் அதன் மதிப்பெண் 49.71-ல் இருந்து மேம்பட்டுள்ளது. மருத்துவக் கலலூரிகளுக்கு மட்டுமான பிரிவில், ஜிப்மர் 70.74 புள்ளிகளுடன் நாட்டிலேயே 5-வது இடத்தைப் பிடித்துள் ளது.

மத்திய பல்கலை.யின் நிலை: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் உட்பட வேறு எந்த நிறுவனமும் முதல்100 இடங்களுக்குள் வர முடிய வில்லை. நாட்டின் 100 சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் முந்தைய இடத்தை (68-வது இடம்) இப்பல் கலைக்கழகம் இழந்துள்ளது. இந் தாண்டு மத்திய பல்கலைக்கழகம் மேலும் கீழிறங்கி, 101 - 150 என்ற நிலைக்கு உட்பட்ட தரவரிசையில் உள்ளது.

2016-ல் 74.74புள்ளிகளுடன் 13-வது இடத்தைப் பிடித்த புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் பல ஆண்டுகளாக படிப்படி யாக சரிந்து வருகிறது. இதன் மூலம் 8 ஆண்டுகளில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 13-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு வெளியேசென்றுள்ளது.

இந்தியாவின் முதல் 50 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியும் இல்லை. காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 44.38 புள்ளிகளுடன் 97-வது இடத்தை பிடித்துள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல் கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ள முதன்மையான புதுச்சேரி பொறியி யல் கல்லூரி உட்பட மற்ற பொறியி யல் கல்லூரிகள் எதுவும் நாட்டின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் இடம் பெறவில்லை.

காலாப்பட்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரி, நாட்டின் தர வரிசையில் உள்ள சட்ட கல்லூரிகளின் முழு பட்டியலிலும் இடம் பெறவில்லை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிரிவில், புதுவையில் உள்ள 20 கல்லூரிகளில், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 53.80 மதிப்பெண்கள் பெற்று 77-வது இடத் தையும், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 151 - 200 ரேங்க் பிரிவிலும் உள்ளது. பாரதிதாசன் பெண்கள் கல்லூரி 201 - 300 என்ற ரேங்க் பிரிவிலும் உள்ளது.

புதுச்சேரியின் பல் மருத்துவக் கல்லூரி, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி பிரிவில் உள்ள எந்த நிறுவனமும் முதல் 100 இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை.

முதல்வரின் தவறான கருத்து: இதுபற்றி புதுச்சேரி முன்னாள் எம்.பியும் மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவருமான பேராசிரியர் ராமதாஸ் கூறுகையில், ‘உயர் கல்வியில் நமது மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது’ என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளது முற்றிலும் தவறான கருத்து என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய உயர்கல்வி தரவரிசை பட்டியலில் புதுவையில் உள்ள எந்த உயர் கல்வி நிறுவனமும் முதலிடத்தில் இல்லை.

புதுவை அரசின் முதல் பல்கலைக்கழகமான தொழில் நுட்ப பல்கலைக் கழகம் 201-ல் இருந்து 300-வது இடத்தைப் பெற்றுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் பிரிவில் ஜிப்மர் 5-வது இடத்தை பெற்றுள்ளது. அம்பேத்கர் சட்டக்கல்லூரி நாட்டின் தரவரிசையில் உள்ள சட்டக் கல்லூரியின் முழு பட்டியலிலும் இடம் பெறவில்லை.

பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அரசின் நிர்வாகக் கோளாறு களால் பல குறைபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. உயர் கல்வியின் தரம் குறைந்து அங்கு படிப்பவர்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர் என்பதுதான் உண்மை. இவற்றையெல்லாம் சரி செய்யா மல் கனவுலகில் வாழ்ந்து கொண்டு தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மக்களையும் முதல்வர் ஏமாற்றுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

அபாயமான சூழல்: கல்வியாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "உயர்கல்விக்கான மாநில கவுன்சிலை அரசு ஏற்படு்த்த வேண்டும். புதுச்சேரிக்கென தனியாக மாநில பல்கலைக்கழகத்தை ஏற் படுத்த வேண்டும். உயர்கல்வியை மேம்படுத்த முதலில் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை எடுக்கத் தவறினால் உயர்கல்வி வளர்ச்சியில் புதுச்சேரி ஓரிரு ஆண்டுகளில் மிகவும் பின் தங்கிவிடும் அபாயம் இருப்பதை அரசு உணர வேண்டும்”என்று தெரி வித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE