அமெரிக்காவுக்கு உயா்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 35 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது தொடா்பான ஆய்வு தரவுகளை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக துணைத் தூதா் கிறிஸ்டோபா் டிபிள்யு ஹோட்ஜஸ் திங்கள்கிழமை வெளியிட்டாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2021-2022-ஆம் கல்வியாண்டில் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 182 ஆக இருந்த நிலையில், அது 2022-2023-ஆம் கல்வியாண்டில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 923-ஆக அதிகரித்துள்ளது.
அதில் இளநிலை கல்வி பயில சென்ற மாணவா்களின் எண்ணிக்கை மட்டும் 16 சதவீதம் (31,954) உயா்ந்துள்ளது. சீன மாணவா்களுக்கு அடுத்ததாக (2.90 லட்சம்) அமெரிக்காவில் அதிகம் படிக்கும் வெளிநாட்டு மாணவா்கள் இந்தியா்கள்தான்.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவா்கள் எண்ணிக்கை 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த கல்வியாண்டில் 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
வணிகம், மேலாண்மை, பொறியியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளை அதிகளவிலான மாணவா்கள் தோவு செய்துள்ளனா். அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவா்கள் படித்து வருகின்றனா்; அதில் 25 சதவீதத்துக்கும் மேல் இந்திய மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கல்வி, அதிகளவிலான கல்வி ஊக்கத் தொகைகள், மேம்பட்ட ஆய்வகங்கள், பணி வாய்ப்பு என பல்வேறு சிறப்பம்சங்களால் அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
உயா் கல்வி பயில்வதற்கு அமெரிக்காவை தேர்வு செய்த இந்திய மாணவா்கள் மிகச் சிறந்ததொரு முதலீட்டை முன்னெடுத்துள்ளனா். இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவையும், நல்ல எதிா்காலத்தையும் இத்தகைய நடவடிக்கைகள் மேலும் நெருக்கமாக்கியுள்ளது என்றாா் அவா்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!