அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

By காமதேனு

தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 29-ம் தேதி வரை கற்றல் விளைவு மற்றும் திறன் மதிப்பீட்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

பள்ளிக் கல்வித்துறை வளாகம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் 29-ம் தேதி வரை கற்றல் விளைவு மற்றும் திறன் மதிப்பீட்டு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன.

இதற்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://txam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத்தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு முறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு , திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Learning Outcome/ Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்‌ என அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE