சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு இந்த ஆண்டு தமிழ் தேர்வு கட்டாயம்: தேர்வுத்துறை உத்தரவு

By KU BUREAU

சென்னை: சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து கடந்தாண்டு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு தமிழ் பாடத் தேர்வில் இருந்து கடந்தாண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட மாணவர்களும், இந்தாண்டு தமிழ் பாடத்தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE