ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதற்கு பதிலாக படிக்காமலேயே இருக்கலாம்... ராகிங் வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

By காமதேனு

ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சக மாணவரை ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த எட்டு மாணவர்கள், மதுபானம் வாங்க பணம் தரவில்லை எனக் கூறி, இளைய மாணவரை மொட்டையடித்து தாக்கி, விடுதி அறையில் பூட்டி வைத்து, ராகிங் செய்ததாக பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், ராகிங் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவையில் மீண்டும் ராகிங்

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எட்டு மாணவர்களும் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தந்தையும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கோரியதாகவும், எந்த நிர்பந்தமும் தரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, எட்டு மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராகிங் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியதுடன், இதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரவு

ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை என்றும், மற்றொருவரை துன்புறுத்துவதன் மூலம் என்ன இன்பம் கிடைக்கிறது என புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நீதிபதி, பள்ளியில் படித்த திருக்குறளை வாழ்க்கையில் பின்பற்றாவிட்டால் அதை படித்து என்ன பயன்? என குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

படிக்க வைப்பதற்காக பெற்றோர் படும் கஷ்டத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், மனிதத் தன்மையற்ற ராகிங் செயலால் மற்றவரை துன்புறுத்துவதன் மூலம் இன்பமடையவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் எனக் கூறிய நீதிபதி, மாணவ பருவத்தில் இளைய சமுதாயத்தினர் ரசித்து வாழ வேண்டுமே தவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!

திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!

மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE