பொருட்களுக்கான காப்புரிமை... இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்!

By காமதேனு

பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பொருட்களுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

கண்டுபிடிக்கும் பொருட்கள் மற்றும் வடிவமைப்புக்கு காப்புரிமை பெறுவது அவசியம். இதன் மூலம் காப்பி அடித்து அதே பொருளை உருவாக்கவோ, விற்பனை செய்வதையோ சட்ட ரீதியாக தடுக்க முடியும். காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவிலும், கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னையிலும் செயல்பட்டு வருகின்றன.

கோப்புப்படம்

காப்புரிமை கேட்டு விண்ணப்பித்த பிறகு பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு காப்புரிமை வழங்கப்படுகிறது. ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும். புதிதாக எந்த ஒரு தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தால் அதற்கும் காப்புரிமை பெறலாம். கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயமாகும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதனால், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2022-23ம் ஆண்டுகளில் காப்புரிமை கோரிய விண்ணப்பங்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

2021-22ம் ஆண்டுகளில் காப்புரிமைக்காக 66, 440 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இது 25 சதவீதம் உயர்ந்து 2022-23 ஆண்டுகளில் 82,811 பதிவுகளாக அதிகரித்துள்ளன. இதில், தமிழ்நாட்டில் இருந்து காப்புரிமை கேட்டு 7,686 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காப்புரிமைக்காக பதிவு செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் 5,626 விண்ணப்பங்களுடன் மகாராஷ்டிரா 2வது இடத்திலும், 5,564 விண்ணப்பங்களுடன் உத்தரப்பிரதேசம் மூன்றாம் இடத்திலும், 5,408 விண்ணப்பங்களுடன் கர்நாடகா 4வது இடத்திலும், 3,405 விண்ணப்பங்களுடன் பஞ்சாப் 5 வது இடத்திலும் உள்ளன. மருந்து, வேளாண்மை, பொறியியல் கண்டுபிடிப்புகள், அழகுசாதன பொருட்களுக்கு காப்புரிமை கேட்டு அதிகம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் மாநாடு... விஜய் மதுரையை தேர்வு செய்தது ஏன்?

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

நெகிழ்ச்சி... தாயின் கல்லறை முன் மனைவிக்கு தாலி கட்டிய மகன்!

திருவிழாவில் பயங்கரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை!

மகளுக்குக் கொடுத்த 'லால்சலாம்' வாய்ப்பு...தோல்வியில் முடிந்தும் சோகத்தை வெளிக்காட்டாத ரஜினி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE