பரமக்குடி பள்ளியில் ‘தேர்வை கொண்டாடுவோம்’ பயிலரங்கில் நடிகர் தாமு!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தேர்வைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு பயிலரங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் கல்விக் குழு தலைவர் சௌந்தர நாகேஸ்வரன் தலைமை வகித்தார். அரிமா சங்க முன்னாள் ஆளுநர் ஜெகநாதன், கல்விக்குழு பொருளாளர் தினகரன், அரிமா சங்க தலைவர் இளங்குமரன், செயலாளர் சுப்பையா, பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்விக் குழு செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும், அப்துல் கலாமின் சீடருமான தாமு சிறப்புரையாற்றினார்.

பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவர்களில் ஒரு பகுதி.
பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

முன்னதாக பள்ளி வளாகத்தில் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் முதல்வர் சோபனாதேவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE