பட்டமளிப்பு விழாவில் பெரியார், திராவிட சிந்தனைகளை மாணவர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் இன்று நடைபெற்ற கலைஞரின் கவிதைகள், திரைப்பட, நாடக வசனங்கள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியானதற்கு காரணமே பெரியார்தான். தமிழகத்தில் ஆணும் பெண்ணும் சமம், அனைவரும் படிப்பதற்கு பெரியார்தான் காரணம். வடமாநிலத்தவரும் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளனர். தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற நப்பாசையில் அவர் பேசி வருகிறார்.
பெரியார், அண்ணா, கலைஞர் , காமராஜர் போன்றவர்கள் அடித்தட்டு மக்களுக்காக, பெண்ணுரிமைக்காக எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே நன்கு தெரியும். பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆகவே, அண்ணாமலை தன்னை திருத்திக் கொள்ளவேண்டும் என உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை செயலாளர் பெயர்கூட அழைப்பிதழில் இடம் பெறவில்லை. அவருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. புதுச்சேரி முன்னாள் ஆளுனர் கிரண்பேடி பட்டமளிப்பு விழாவில் ஆளுநரோ, துணை வேந்தரோ பேசவில்லை என்று கூறியுள்ளார்.
உங்களுடன் உள்ள ஐபிஎஸ் அதிகாரியே பேசியுள்ளார். முன்பெல்லாம் எங்களுக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டு, பேச அனுமதிக்கப்பட்டது. இப்போது அனுமதிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஆளுநர் தான் மட்டும்தான் பேசவேண்டும் என்ற எண்ணம்தான்.
பெரியார், திராவிட சிந்தனைகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பு அளித்து 5 நிமிடம் அனுமதி அளிக்கவேண்டும். ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும் எங்களையும், உயர்கல்வி செயலாளரையும் அழைத்து பேச அனுமதிக்கவேண்டும்.
மேடையில் உயர் கல்வி செயலாளருக்கு இருக்கைக்கூட ஒதுக்கப்படவில்லை. இனி பட்டமளிப்பு விழாவை துணை வேந்தரான நீங்கள் நடத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு இனி ஆளுநர் நடந்துகொள்ளமாட்டார் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!